2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இதனிடையே, நேற்று டுபாயில் நடைபெற்ற 10ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வெற்றி கொண்டது.
முதலில் துடுப்பெடுத்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் பெற்றது. தொடர்ச்சியாக வெற்றி இலக்கான 147 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி, 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களில் மட்டுப்பட்டு தோல்வியடைந்தது.








