இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 5 பேர் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக, தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பணிப்பாளர் ஆலோசகர் சமூக மருத்துவர் சிந்தா குணரத்ன, 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடளவியரீதியில் 1,600 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,

சிறுநீரக நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பிற்கால கட்டங்களில் மட்டுமே வெளிப்படும் என்பதையும் அதனால், தொற்றா நோய்கள் (NCDs) கொண்டவர்கள் சீரான சிறுநீரக பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here