மொனராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், மாணவர் ஒருவரால் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (அக். 1) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

மாணவர் ஒருவர் வைத்திருந்த கைத்தொலைபேசி மின்னேற்றியை (Phone Charger) ஆசிரியர் கைப்பற்றிய பின்னர், அந்தச் செயலில் இருந்து உருவான வாக்குவாதம் முற்றி, மாணவர் ஆசிரியரை தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவரை காவல்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக தங்களது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here