காலி முகத்திடலிலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

56 வயதான சந்தேக நபர், விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது, கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் திரு திலீப சி. பெரேராவின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுமதியின்றி விமானப் பாதுகாப்பு வலயங்களில் ட்ரோன் பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here