கடந்த நிர்வாகங்களின் போது தலையீடுகளை தடுக்கும் பொருட்டு வழக்கை ஒத்தி வைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, குறித்த அதிகாரியை மேற்கோள் காட்டி, “அப்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது அவர் பதவி நீக்கப்படுவதற்கு அல்லது வழக்கை சீர்குலைக்க வழிவகுத்திருக்கும். எனவே, நீதிக்கான உறுதியான அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை வழக்கை தக்கவைக்க அந்த அதிகாரி முடிவு செய்தார். தனிப்பட்ட இடர்பாடுகள் இருந்தபோதிலும் அவர் நீதிக்கு முன்னுரிமை அளித்துள்ளார்” என அதிகாரியை ஜனாதிபதி பாராட்டினார்.

ஊழல் மற்றும் மோசடி விசாரணைகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி பொலிஸ் உட்பட சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் செயற்படுவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிணை வழங்குவது சட்டச் செயல்பாட்டின் ஒரு பகுதி என்றும், மாறாக அது பாகுபாட்டின் பொருட்டு வழங்கப்படுவதில்லை என்றும், நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் குறித்த கரிசனங்களை ஜனாதிபதி வெளியிட்டார். முழுமையான ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும் சரியான நேரத்தில் வழக்கு பதிவு செய்வது முன்னுரிமையாக உள்ளது, என அவர் மேலும் கூறினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் 11 முக்கிய வழக்குகளை அடையாளம் கண்டுள்ளதுடன், மூன்று வழக்குகள் ஜனவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“நாங்கள் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் வழக்குகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. சட்டச் செயல்பாட்டின் நேர்மையை நிலைநாட்ட விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here