Saturday, May 30, 2026
No menu items!

சட்டமா அதிபர் திணைக்களம்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிப்பு!

அண்மைய காலங்களில் நடந்த 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகைகளைத் தயாரிப்பதில் விசேட குழுவொன்று தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளவர்களில் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்துள்ளது!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில்...

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்க முயற்சி!

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்க மாட்டோம் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் சட்டமா அதிபர் குறித்து வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் குறித்து தனது சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஷ்யா கஜநாயக்க அறிக்கை ஒன்றை...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சர்ச்சைக்குரிய க்ரிஷ் திட்டம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்சி மாறும் வரை வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி

கடந்த நிர்வாகங்களின் போது தலையீடுகளை தடுக்கும் பொருட்டு வழக்கை ஒத்தி வைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, குறித்த அதிகாரியை மேற்கோள் காட்டி, “அப்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது அவர் பதவி நீக்கப்படுவதற்கு அல்லது...

நாட்டை விட்டு வெளியேறிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு..!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட அதிகாரிகள் குறைவாக இருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட குழு அதிக எண்ணிக்கையிலான கோப்புகளால் சுமையாக இருப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு அதிகாரியின் கையில் 200 - 300 கோப்புகள் சிக்கியிருப்பதாகவும், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகவும்...

விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்; மனோ கணேசன்!

ஊழல் வழக்குகளை தினசரி விசாரணையுடன் துரிதப்படுத்துவதற்காக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி.மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வரவேற்ற அவர், இலஞ்ச ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களை கூடுதல் வளங்கள் மற்றும் சட்ட அதிகாரங்களுடன்...

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்தவர்கள்- இந்த மாத இறுதியில் கைது..!

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்த பலர் இந்த ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்படவுள்ளதாக  செய்தியில் கூறப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது அந்தப் பணிகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் இருவர், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரும்...

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை..!

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img