இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் மனித நடவடிக்கைகளால் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன என்றும் மேலும் 23 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் மற்றும் உயிருள்ள மின் கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 19 யானைகள் “ஹக்க பட்டாஸ்” எனப்படும் வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டு உயிரிழந்துள்ளன.மேலும் 3 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
இதே காலப்பகுதியில் 2 யானைகள் ரயில் விபத்திலும், 4 யானைகள் வீதி விபத்திலும் உயிரிழந்துள்ளன. 6 யானைகள் விவசாய கிணறுகளில் விழுந்தும், 3 யானைகள் ஏனைய விபத்துகளிலும் மரணமடைந்துள்ளன.
மனித செயல்கள், விபத்துகள் மற்றும் இயற்கை காரணங்கள் அனைத்தும் சேர்த்து கடந்த ஏழு மாதங்களில் மொத்தம் 180 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.








