ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
வர்த்தக போக்குவரத்து கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் திறனை மேலும் பலவீனப்படுத்துவதே இந்த தாக்குதல்களின் நோக்கம் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








