கல்வெல-மிதிகம வீதியில் அரச பஸ்ஸை ஆபத்தான முறையில் வழிமறித்து அசமந்தமான முறையில் செலுத்திய தனியார் பஸ் ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 1 ஆம் திகதி கொட்டாவில பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதை அடுத்து, மாத்தறை போக்குவரத்து பொலிஸார் பஸ்சை கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு முன்னரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த குறித்த சாரதி மாத்தறை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அவருக்கு போதை பரிசோதனையும், பேருந்துக்கான தொழில்நுட்ப பரிசோதனையும் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here