முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டில் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைத்துக்கொண்டதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் இடம்பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடற்படையில் இணைவதற்கான முறையான தகுதிகள் (கல்வித் தகுதிகள்) இல்லாத நிலையிலும் யோஷித ராஜபக்ஷ இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும், கடற்படை நடைமுறைகளை மீறி அரச செலவில் ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடற்படை கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.

இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ, கடந்த ஜூன் 17, 2026 அன்று கைது செய்யப்பட்டு, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று பிணைகளில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதிலும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லை என்றும், சாட்சிகளைத் துன்புறுத்தியதற்கோ அல்லது விசாரணைகளில் தலையிட்டதற்கோ ஆதாரங்கள் இல்லை என்றும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here