வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ், ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC அறிவித்துள்ளது.
இதற்கமைய, சாதாரண பேருந்து சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 இல் இருந்து ரூ. 34 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 2,422 இல் இருந்து ரூ. 2,902 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளன.
அரை சொகுசு பேருந்து சேவைகளுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 44 இல் இருந்து ரூ. 51 ஆக அதிகரிக்கபோடவுள்ளது. அரை சொகுசு சேவைகளின் அதிகபட்ச கட்டணமும் ரூ. 3,330 இல் இருந்து ரூ. 4,353 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களின் முழுமையான பட்டியல் தனியாக வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








