ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகளின் உற்பத்தி வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுர்வேத மூலிகை வளர்ப்பு மற்றும் சேகரிப்புக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ஆயுர்வேதத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத கூட்டுத்தாபனம் என்பன இணைந்து செயல்படுத்துகின்றன.

அதன்படி, உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு மூலிகைத் தோட்ட வலையமைப்பை வலுப்படுத்துவதன் ஊடாக உள்ளூர் ஆயுர்வேத மருந்து உற்பத்தியை அதிகரிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், உள்ளூர் ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான பல மருத்துவ மூலப்பொருட்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here