இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனையொட்டி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு ஆதரவு வழங்க கடந்த18ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பு சுகததாச அரங்கில் கைச்சாத்திடபடவுள்ளது.

மேலும் 2024 ஜனாதிபதி தேர்தலின், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடவுள்ளது.

எமது நாட்டின் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதியை அதிகப்படியான வாக்குகள் மூலம் மீண்டும் வெற்றிபெற செய்வோம்.

நாங்கள் அனைவரும் ஒரணியாக திகழ்வோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here