புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய  பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ் குழுவொன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் (25.08) மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here