முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு வலய கல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் இன்றைய தினம் (12.03.2025) மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.


இவ்வாய்வு கூடத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக நவீனபுதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு வலைய கல்வி பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








