பஹ்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய, பஹ்ரைனின் தற்போதைய பிராந்திய நிலைமை தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவசர நிலை ஏற்பட்டால் கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்பு இலக்கம்: 33530290

ஜி.எம்.டி. தரங்கிகா (Attaché): (+973) 3597 0290 / (+973) 3510 6301

கௌதமி (தொழிலாளர் செயலாளர்):(+973) 3371 2875

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here