இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 18 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here