அக்டோபர் 1 – இன்று உலகம் முழுவதும் உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது.

சமூகத்தின் இரண்டு முக்கியமான முனைகளான குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சிறுவர் தினம், குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலம் குறித்து பேசும் ஒரு முக்கிய நாளாகும்.

பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் செயல்பாடுகள் நடைபெறுகின்றது.

முதியோர் தினம், வயதானோர் வாழ்வதற்கான மரியாதை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சமூகத்தை நினைவூட்டுகிறது.

மூத்த குடிமக்கள் சமூகத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய பங்களிப்புகள் பல இன்றைய தலைமுறை அவர்கள் அர்ப்பணித்த வாழ்க்கையின் பயனையே அனுபவிக்கிறது. அவர்களுக்கான நல்வாழ்வு மற்றும் மதிப்பு குறித்து எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நாள், தலைமுறைகள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும், அனுபவமும் ஆற்றலும் ஒன்றிணையும் அரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. குடும்பம், சமூகம் மற்றும் நாடு ஆகிய அனைத்திலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெறவேண்டிய அக்கறை குறித்து நினைவூட்டும் ஒரு முக்கிய நாளாக இது அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here