பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 6) முதல் அறிவிக்கப்படுகின்றன.
முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் வெளியிடப்படவுள்ளது.
உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது, 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்படவுள்ளன.
நோபல் விருது பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10.41 கோடி (இந்திய மதிப்பில்) பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்நிலையில், இஸ்ரேல்–ஹமாஸ் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கிடையேயான போர்களை முடிவுக்குக் கொண்டு வர முயன்றதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு தன்னக்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால், வரும் அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.








