2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் இன்று (அக்டோபர் 6) பூரணை தினத்துடன் இணைந்து வானில் காட்சியளிக்கவுள்ளது.
பொதுவாகக் காணப்படும் முழு நிலவை விட சுமார் 7% அதிகம் பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும் என ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.
நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருவதும், அதே நேரத்தில் முழு பௌர்ணமியாக இருப்பதும் இணைந்தபோது நிகழ்வதே “சூப்பர் மூன்” எனப்படும் வானியல் நிகழ்வு.
முழு நிலவின் ஒளி இரவுகளில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடைச் செயலில் பேருதவியாக இருப்பதால், நாட்டுப்புறக் கதைகளில் இதனை ‘அறுவடை நிலவு’ என்றும் அழைப்பார்கள்.
இந்த அற்புதமான சூப்பர் மூனைக் இன்று பொதுமக்கள் தங்களின் கண்களால் நேரடியாகக் காண முடியும் என்றும், இதனால் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அனைத்து பூரண தினங்களிலும் சூப்பர் மூன் நிகழ்வதில்லை என்பதோடு, அடுத்த சூப்பர் மூன்கள் நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 4 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ‘சூப்பர் மூன்’ என்ற பெயரை முதன்முதலில் 1979ஆம் ஆண்டு வானியல் நிபுணர் ரிச்சர்ட் நுலே அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.







