இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, மற்ற அம்சங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் இடையிலான முக்கியமான பேச்சுவார்த்தை இன்று எகிப்தில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில்,

“இந்த வார இறுதியில் ஹமாஸ் கைதிகளை விடுவிப்பது மற்றும் காசா போருக்கு முடிவு காணும் விவாதங்கள் வெற்றிகரமாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன. அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் யாரும் பார்க்க விரும்பாத இரத்தப்பாய்ச்சல் தொடரும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன்; நேரம் மிக முக்கியமானது” என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here