நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும்.

நாட்டின் பல இடங்களில்  காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே காணப்படும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here