சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில்  மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத்  திசையை நோக்கி காற்று வீசும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here