கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரம் பரவிய தீயை அணைப்பதற்காக இரத்தினபுரி நகர தீயணைப்பு பிரிவும் அழைக்கப்பட்டுள்ளது.

தீப்பிடித்த கட்டிடம் இதற்கு முன்னர் நோயாளிகள் வார்டாக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்னர் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டதுடன் குறித்த வார்டு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று அதிகாலை சுமார் 04 மணியளவில் மின்சார சபையினால் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here