மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறைமாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்டவானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒருமணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

நாட்டின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்தமழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியசந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறைவரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லதுஇரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில்தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here