அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுத் திட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், 8,943 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.4 மில்லியன் மாணவர்களுக்கு பயனளிக்கிறது.

2006 ஆம் ஆண்டு தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 100 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும், விசேட கல்வி பிரிவுகளில் உள்ள மாணவர்களும் உணவுப் பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேலும், 6 முதல் 13ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளின் அடிப்படையில் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here