மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்அத்துடன் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பிற்பகல் ஒருமணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சிலஇடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழைபெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்தியமற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலைமற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியசந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறுகேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறைவரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பலஇடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில்தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்
கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாகதிருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில்மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில்இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறானசந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு
கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்றுவீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள்தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here