பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் நெடுநாள் மீன்பிடி படகின் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அந்த கடல் பகுதிகளில் 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.

மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here