வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையிலும்  மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here