யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் குடிநீர் என நினைத்து கல்சியம் கரைக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் போத்தலின் ஒரு பகுதியைப் பருகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள கலாசாலை கிராமத்தில் வசிக்கும் ராசன் மைக்கல் என்ற 83 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதயவர் குடிநீர் போத்தல் என நினைத்து இரசாயன போத்தலைக் குடித்துள்ளார்.
இரசாயனங்களை உட்கொண்ட பிறகு கடுமையான அசௌகரியம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here