இரத்மலானை,கந்தாவல வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தாவல சந்தி பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது, ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிதாரி மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








