நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகியாக 66 ஓட்டங்களையும் ஒரு விக்கட்டையும் பெற்ற பெங்களூர் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளையதினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here