இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பாக ஸ்மிர்தி மந்தனா 50 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹர்மன்பிரீட் கௌர் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here