நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (08.10.2024) நிறைவடையவிருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய கால எல்லை நீடிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய அன்றைய நாள் நிறைவடையவதற்கு முன்னர் உரிய மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த திகதியில் எதுவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here