தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக தரப்புகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார். தமது ஒரு வார கால அதிகார பூர்வ விஜயத்தில் சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், அமைச்சர் பான் தனது பயணத்தின் போது கண்டிக்கும் செல்லவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here