மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையிலும், உலக சாதனை படைக்கும் முகமாகவும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காலி முகத்திடலில் (Galle Face) வைத்து தமது பயணத்தை ஆரம்பித்தவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொழுது, இவரது சாதனைப் பயணத்தினை தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளரான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி தரப்பினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரின் கோரிக்கைகளை் அடங்கிய மகஜரையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் குறித்த இளைஞன் மூன்று கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து தமது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதில், மலையக மக்களை தோட்டக்காட்டான் என்று மட்டம் தட்டலை நிறுத்துதல், வெளிநாடுகளுக்கு செல்லும் எமது நாட்டு பெண்களுக்கு சரியான கவனிப்பு, பராமரிப்பு இல்லை, தகுந்த பாதுகாப்பு இல்லை அதனை ஜனாதிபதி தலையிட்டு அவர்கள் நலனில் அக்கறை கொள்ளச் செய்தல், தன்னைப் போன்ற சாதனையாளருக்கு சரியானதொரு அங்கீகாரம் என்பன வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமது உலக சாதனை நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]







