இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Takafumi Kadonoவை இன்று (07.10.2024) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் சுற்றுலா, எரிசக்தி, மற்றும் சிறுதொழில் முயற்சி துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அறிந்துகொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் தற்போதுள்ள அனைத்து உடன்படிக்கைகளும் திட்டமிட்டபடி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என கடோனோ வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான ஆதாரங்களை வழங்குவதற்கும் ADB உறுதிபூண்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்கான கோரிக்கைக்கு கடோனோ தனது உடன்பாட்டை வெளிப்படுத்தினார்.
மேலும், இலங்கையில் எரிசக்தி திட்டங்கள், சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நிதித்துறையின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.








