இலங்கை முதலீட்டு சபை (BOI), 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரைஅங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம்  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொத்தம் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக் கடன்களும் அடங்குகின்றன.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 138% அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் நான்கு முக்கிய ஆதாரங்களில் இருந்து வந்துள்ளன:
பங்கு மூலதனம் – 133 மில்லியன்அமெரிக்க டொலர்,

மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் – 132 மில்லியன்அமெரிக்க டொலர்,

நிறுவனங்களுக்கு இடையேயான வெளிநாட்டு கடன்கள் – 231 மில்லியன்அமெரிக்க டொலர்,மற்றும் நீண்டகால வெளிநாட்டு வணிகக் கடன் – 331 மில்லியன் அமெரிக்க டொலர்.

BOI அறிக்கை படி, இந்த முன்னேற்றம் புதிய முதலீட்டாளர்களின் வளர்ந்துவரும் நம்பிக்கையையும், தற்போதைய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here