ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (20) இரவு ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4–5 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here