கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (ஜூலை 14) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் 63 வயது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் இருந்து 6.180 கிலோகிராம் குஷ் வகை போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 61.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








