நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 25 மற்றும் 39 வயதுடைய 2 சிறை அதிகாரிகள் ஜூலை 13 மற்றும் ஜூலை 14 அதிகாலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 21 கைதிகள் ஏற்கனவே உயிரிழந்தனர். இதனுடன் மொத்த உயிரிழப்பு 31 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பல சிறை அதிகாரிகளும் கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here