இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கல்வி தொடர்பான கடுமையான அழுத்தம், பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை மாணவர்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இலங்கையின் மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
இன்றைய (அக்டோபர் 10) உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியபோது அவர் இதனை கூறினார்.








