புத்தளம், கற்பிட்டி, உச்சமுனை மற்றும் முந்தல் ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 748.6 கிலோ கிராம் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, புத்தளம் கற்பிட்டி உச்சமுனை கடற்கரை பகுதியிலிருந்து 499 கிலோ கிராம் நிறையுடைய 15 பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புத்தளம் முந்தல் கடற்கரை பகுதியிலிருந்து 249.6 கிலோ கிராம் நிறையுடைய 07 பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here