ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற இலங்கை தமிழரசுகட்சியின் நிலைப்பாடு குறித்து எந்தவித குழப்பமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவில் அறிவிக்கப்பட்டது போன்று இலங்கை தமிழரசுகட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற உத்தியோகபூர்வ முடிவை எடுத்துள்ளது.

எனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடும் இது ,இதுவே எனது நிலைப்பாடும், இந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here