பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16.11.2024 அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் பலவந்தமாக இலஞ்சம் பெற்றதை அடுத்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி களிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியகட்சருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பூநகரி சங்கப்பட்டி பாலத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டை பொலிஸ் உதவி அத்தியகட்சகர் பிரிவினரால் பதினையாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட பொழுது 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.









