டிப்பர் வாகனச் சாரதியிடம் 2,000 ரூபா இலஞ்சம் பெற்ற பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா 5,000 ரூபா அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட டிப்பர் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

குறித்த தண்டனைக் காலத்தில் குற்றவாளிகளின் வாக்குரிமையை இரத்துச் செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

எட்டு வருட சிறைத்தண்டனையை நான்கு வருடங்களில் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என நீதவான் மேலும் குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here