கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மணலுடன் சென்ற டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றுபிற்பகல் (10.12.2025) இடம்பெற்றுள்ளது.
பயணித்தவர்,
திருவையாறு பகுதியில் இருந்து இரணைமடு சந்தி நோக்கி மணலுடன் சென்று கொண்ந்த டிப்பர் வாகனம் அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடையப்பட்டதோடு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








