ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல்7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீற்றர் (9.84 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படக்கூடும் என குறித்த மையம் எச்சரித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டதுடன், அது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மக்கள் நடமாடுவதையே கடினமாக்கும் அளவுக்கு வலுவான அதிர்வு என தெரிவிக்கப்படுகின்றது. சில சமயங்களில், வலுவூட்டப்படாத கொங்கிரீட்-கட்டடச் சுவர்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








