தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ஜனாதிபதி, இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் குறிப்பிட்டதோடு, இந்த உறவானது வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு ரீதியாக வேரூன்றி தலைமுறை தலைமுறையாக நீடித்து வருகின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் தங்களது கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதால், ‘எதிர்காலம் மிகப்பெரிய பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

வலுவான இந்திய-இலங்கை உறவுக்குள் இணைந்து பணியாற்றி, பிராந்தியத்தில் செழிப்பையும் முன்னேற்றத்தையும் மேலும் வலுப்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் எல்லா வெற்றிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை மக்கள் என்னுடன் இணைகிறார்கள்,” என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here