உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோய் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். சொல்லப்போனால் இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஒருவருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளால் ஏற்படும் இதய நோயின் அபாயத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைக் கொள்வதன் மூலம் ஓரளவு தடுக்கலாம்.

எனவே உங்கள் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாருக்கேனும் இதய நோய் இருந்தால், வயது அதிகரிக்கும் போது அதுக்குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் தெரிவிப்பதோடு, ஒருசில பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இப்போது ஒருவரது பரம்பரையில் யாருக்காவது இதய நோய் இருந்தால், அந்நபர் எந்த மாதிரியான பழக்கங்களைத் தவிர்த்தால், மாரடைப்பு போன்ற இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம்.

தேன் கலந்த எலுமிச்சை நீர் குடிப்பது எலுமிச்சை நீரில் தேன் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் ஆற்றல் மேம்படுத்துவதோடு, செரிமான மண்டலமும் சிறப்பாக செயல்படும். ஆயினும், ஆரோக்கியமான நபர், காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிக்கும் போது, அது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், இப்பழக்கத்தைக் கைவிடுவதே நல்லது.

உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுவது உணவு உட்கொண்ட பின் சிலருக்கு இனிப்புக்களை சாப்பிடத் தோன்றும். ஆனால் இதை வழக்கமாக கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, உணவு உட்கொண்ட பின் இனிப்புகளை உட்கொண்டால், அதன் மூலம் இன்சுலின் அளவு அதிகரிக்கும், எடை உயரும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இவை அனைத்தும் சேர்ந்து இதய நோயின் அபாயத்தைத் தூண்டும்.

இரவு லேட்டாக சாப்பிடுவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருந்தால், உண்ணும் உணவில் மற்றும் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். லேட்டாக சாப்பிட்டால் அது செரிமானத்தை சீர்குலைப்பதோடு, இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோயின் அபாயம் அதிகரிக்கும். மேலும் இரவு சாப்பிடுவதாக இருந்தால், 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

இதனால் உணவு செரிக்க போதுமான நேரம் கிடைக்கும். முக்கியமாக சர்க்கரை, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் உட்கார்வது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுவும் உணவு உட்கொண்டதும் உட்கார்ந்தவாறே இருந்தாலோ அல்லது தூக்கத்தை மேற்கொண்டாலோ, உணவில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக்குழாய்களில் அப்படியே படிந்து, பெருந்தமனி தடிப்பு அபாயத்தை அதிகரிக்கும். இறுதியில் மாரடைப்பை வரவழைக்கும்.

எனவே எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு இல்லாமல், உடலுக்கு ஏதாவது வேலை கொடுத்தவாறு இருங்கள். “HMPV Virus Outbreak HMPV வைரஸ் தொற்று குறித்த வதந்திகளும்.. உண்மைகளும்.. ” சரியாக தூங்காமல் இருப்பது தூக்கமானது உடலுக்கு நல்ல ஓய்வை அளித்தாலும், இந்த தூக்கத்தை மேற்கொள்ளும் போது அது மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே எப்போதும் இரவு லேட்டாக தூங்குவதைத் தவிர்த்திங்கள். முடிந்த வரை வேகமாக தூங்கி எழ முயற்சி செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here